திருப்பூர் : திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் கழிவறையில் ஆதரவற்ற நிலையில் கிடந்த பெண் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் அருகே உடுமலை சாலையில் உள்ள கேத்தனூரில் தனியார் நூல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாலை அந்நிறுவன கழிவறையில் பிறந்து 1 மணி நேரமே ஆன பெண் குழந்தையைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக ஊழியர்கள் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், குழந்தையின் பெற்றோர் யார்..? வெளி நபர்கள் யாரேனும் குழந்தையை வீசிச் சென்றனரா..? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.