நீலகிரி : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு இன்று வரை கோடநாடு எஸ்டேட் தொழிலாளர்களிடம் மட்டுமில்லாத இப்பகுதி மக்களிடம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு இன்று வரை கோடநாடு எஸ்டேட் தொழிலாளர்களிடம் மட்டுமில்லாத இப்பகுதி மக்களிடம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவ்வப்போது வந்து தங்கி அரசு மற்றும் கட்சி சார்பிலான பணிகளை மேற்கொள்வார். இந்த நிலையில், மற்ற மாவட்ட மக்களை காட்டிலும், கோடநாடு சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் எஸ்டேட் தொழிலாளர்களிடம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும், பேசக்கூடிய வாய்ப்பும் அதிகம் கிடைக்கும். இந்த நிலையில், ஜெயலலிதாவிடம் பரிச்சயபட்ட இவர்கள், தற்போது அவரின் மறைவையடுத்து மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு முறை கோடநாடு வந்து செல்லும் போதும், இப்பகுதி கொண்டாட்டங்கள் ததும்ப திருவிழா போல கோலாகலத்துடன் காணப்படும். அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் கோடநாட்டில் அவரை சந்திக்க அமைச்சர்களும், காவல் அதிகாரிகளும் குவிந்து காணப்படுவதால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
இந்த நிலையில், இந்த கோடநாடு எஸ்டேட் தற்போது வெறிச்சோடி காணப்படுவதாக கொடநாட்டில் வசிக்கும் மாரியாயி, விஜயன், சிவம், எஜமான் ஐயா, கஸ்தூரி மற்றும் எஸ்டேட்டில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த இனிமையான நினைவுகள் இப்பகுதி மக்களிடையே இன்றும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, கோடநாட்டிற்கு முதலமைச்சர் வந்து செல்லும்போது இப்பகுதியில் அனைத்துத் துறை அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையால் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள கோடநாடு எஸ்டேட் பிரபலமடைந்தது. ஆனால், இன்று இப்பகுதி ஆராவாரமில்லாமல் அமைதியாக இருப்பது இப்பகுதி மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இன்னும் இப்பகுதி மக்கள் முதலமைச்சரை இழந்த துயரத்தில் இருந்து மீளமுடியாத நிலையிலேயே உள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
