கோத்தகிரியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

நீலகிரி : கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிக்கு நடுவே தனியார் தொலைபேசி கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி : கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிக்கு நடுவே தனியார் தொலைபேசி கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



கோத்தகிரி அருகே கேர்பெட்டா கிராமத்தில் 300 குடும்பங்கள் மற்றும் அதனைச் சுற்றி 2,000 பேர் வசித்து வருகின்றனர். ஊர் மைய பகுதியில் தனியார் தொலைபேசி கோபுரம் அமைப்பதற்கு ஆட்சேபனை செய்தனர். அப்போது, கோத்தகிரி வட்டாட்சியர் வேலைகளை தடுத்து நிறுத்தினர். பின்பு ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென தொலைபேசி கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த வேலையை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர், கோத்தகிரி வட்டாட்சியர், காவல்துறை ஆகியோரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டன. 

மேலும், தொடர்ந்து தனியார் நிறுவனம் தொலைபேசி கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், ஊர் பொதுமக்கள் வேலைகளை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரம் வட்டாட்சியரிடம் தங்கள் குடும்ப அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க முற்பட்டனர். இதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் ரவிக்குமார் வேலையே நிறுத்தி வைத்தார்.

இந்த நிலையில், இன்று மீண்டும் வேலை செய்வதற்கு சரக்கு வாகனத்தில் பொருட்களை கொண்டு வந்தனர். ஊர் மக்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு, கொண்டு வந்த பொருட்களை தனியார் தொலைபேசி நிறுவனம் திரும்ப எடுத்துக் கொண்டு சென்றனர். மேற்கொண்டு தொலைபேசி கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டால் மாபெரும் போராட்டம் நடத்தியிருப்பதாக முடிவு செய்துள்ளனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...