மேம்பாலப் பணிகள் காரணமாகக் கோவை - பொள்ளாச்சி அரசு பேருந்துகளில் மேலும் கட்டண உயர்வு

கோவை : கோவையில் மேம்பாலப் பணிகள் காரணமாகக் கோவை - பொள்ளாச்சி வழியாகச் செல்லும் பேருந்துகளுக்குத் தொடர்ச்சியாக கட்டணம் உயர்த்துவருகிறது.

கோவை : கோவையில் மேம்பாலப் பணிகள் காரணமாகக் கோவை - பொள்ளாச்சி வழியாகச் செல்லும் பேருந்துகளுக்குத் தொடர்ச்சியாக கட்டணம் உயர்த்துவருகிறது.

கோவையில் உக்கடம் - ஆத்துபாலம் இடையே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் அரசு, தனியார் மற்றும் கல்லூரி பேருந்துகள் அனைத்தும் ஒரு வழிப்பாதையாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையம் வர வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சுமார் 5 கி.மீ தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது.


இந்நிலையில், ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் மேம்பாலப் பணி காரணமாக 5 கி.மீ தூரம் வரை சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் திடீரென ரூ.3 பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது.

ஆத்துபாலத்திலிருந்து புட்டு விக்கி லேக், செல்வபுரம், மீன்மார்க்கெட் வழியாக உக்கடம் பேருந்து நிலையம் வர உத்தரவிடப்பட்டுள்ளது. உக்கடத்திலிருந்து ஆத்துபாலம் செல்ல வழக்கம் போல் கரும்புக்கடை வழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையம் வர வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் 5 கி.மீ தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது.

அதைப் போலவே ஈச்சனாரி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் காரணமாக சுந்தராபுரம் வழியாக மதுக்கரை மார்க்கெட் சென்று அங்கிருந்து பொள்ளாச்சி சாலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையுள்ளது. இதனைப் பயன்படுத்தி பயணிகளிடம் அரசு பேருந்து நிர்வாகம் ரூ. 3 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுவரையிலும் கோவை - பொள்ளாச்சி இடையே சாதாரண கட்டணமாக ரூ. 25, எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ.33 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது உக்கடம் மேம்பாலப் பணிகள் காரணமாக சாதாரண பேருந்துகளில் ரூ. 28 மற்றும் சில தனியார் பேருந்துகளில் ரூ.40 வரையிலும் வசூலிக்கப்படுகிறது என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி கூறுகையில், "இரண்டு இடங்களில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் காரணமாக சுமார் 10 கி.மீ தூரம் வரை சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது," என்றார்.

அடுத்தடுத்து உயர்த்தப்படும் பேருந்து கட்டணங்கள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...