கோவை : பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இருக்கும் சாக்கடையில் மனித கழிவுகள் கலப்பதால், புழுக்கள் உண்டாகி நோய் பரவும் அபாயம் இருந்து வரும் நிலையில், பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனப்போக்காக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாப்பநாயக்கன்பாளையம், ஜோதி நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மாவட்டத்தின் நகரின் மையப்பகுதியாக உள்ள இப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து டிரைனேஜ் அமைக்கப்படாமல் சாக்கடையில் கலக்கப்படுகிறது. இதனால், சாக்கடையில் பல்வேறு நோய்களை உண்டாக்கும் புழுக்கள் உருவாகி, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இது தொடர்பாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக அப்பகுதி தனியார் குடியிருப்பு உரிமையாளரிடம் பேசிய போது, "தன்னால் எதும் செய்ய இயலாது. எங்கு வேண்டுமானாலும் புகாரளித்து கொள்ளுங்கள். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், வெறும் 200 ரூபாய் தானே அபராதம். அதை நான் செலுத்திவிடுவேன்," என அப்பகுதி பொதுமக்களிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது :- கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த பலனும் இல்லை. அப்படியே துப்புரவு பணியாளர்கள் வந்து துப்புரவு பணியில் ஈடுபட்டாலும், சாக்கடையை வாரி வீட்டின் முன் இரைத்துவிட்டு செல்கின்றனர். மேலும், அருகே இருக்கும் குப்பைகளையும் சுத்தம் செய்வதில்லை. இதனால், குப்பைகள் முழுவதும் சாலையில் பறந்து வருகின்றன. துர்நாற்றம் வீசி டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகியுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள பலருக்கு டெங்கு, பன்றிக்காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், என்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் கூறியதாவது :- மாலை நேரங்களில் கொசுக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இதனால், சிறுவர், சிறுமியர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. கொசுக்களால் நோய் பரவி மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். பல இடங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் யாரும், தங்களது பகுதிக்கு இதுவரை வரவில்லை. உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், இவ்வாறு கோரிக்கை வைத்தார்.

"தனியார் குடியிருப்பு செப்டிக் டேங்க் அமைக்காமல் மனித கழிவுகள் சாக்கடையில் கலக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தால் அந்த தனியார் உரிமையாளர் மீது வழக்கு தொடர செல்கிறார். அப்படியே வழக்கு தொடர்ந்தாலும் அவர்களுக்கு ரூ. 200 தான் அபராதமாக கட்ட வேண்டியது வரும். இதனை ஒன்றும் செய்ய முடியாது என அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் பதில் அளிக்கின்றனர். அரசும், மாநகராட்சி அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம்," இவ்வாறு அப்பகுதியைச் சேர்ந்த ஜோஸ் என்பவர் கூறினார்.

இதேபோல, அப்பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவர் கூறுகையில், "இப்பகுதியில் போதிய சாக்கடை வசதி இல்லை. சாக்கடையில் உற்பத்தியாகியுள்ள புழுக்கள் துர்நாற்றம் வீசுகிறது. புழுக்கள் குழாய் வழியாக வீட்டிற்குள் நுழைகின்றன. மேலும், இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் கொசு மருந்து அடிப்பது அதிகாரிகள் ஆய்வு போன்ற எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பலருக்கு மர்மக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக பலமுறை புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்க மறுக்கின்றனர்," இவ்வாறு குற்றம் சாட்டினார்.

தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் மற்றும் மர்மக்காய்ச்சல் பரவி நாளுக்கு நாள் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்தை பேணிகாப்பதாக தமிழக அரசு கூறி வருகிறது. உடனடியாக சுகாதாரமற்ற பகுதிகளை ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தங்கள் டெங்கு, பன்றிக்காய்ச்சல் மற்றும் மக்களின் உயிரை கொல்லும் மர்மக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த முடியும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.