கோவை : மதுக்கரை அருகே கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட ஆண் சிறுத்தை கோவை மாவட்ட வனப்பகுதிக்குட்பட்ட சிறுமுகை பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
கோவை : மதுக்கரை அருகே கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட ஆண் சிறுத்தை கோவை மாவட்ட வனப்பகுதிக்குட்பட்ட சிறுமுகை பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள மோலப்பாளையம் கிராமத்தில் கடந்த 24-ம் தேதி கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடிச் சென்றதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். எனவே, செங்கனூரில் பொருத்தப்பட்டிருந்த கூண்டு, மோலப்பாளையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த கூண்டில், சுமார் 7 வயதுடைய சிறுத்தை அகப்பட்டது. இதனையறிந்த வனத்துறையினர், சிறுத்தையை மீட்டு சிறுமுகையில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.