திருப்பூர் : திருப்பூரில் நிட்டிங் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட புதிய கட்டணத்தைக் கூலியாக வழங்க வலியுறுத்தி, நிட்மா, சிம்கா சங்கங்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

பின்னலாடை நிறுவனங்களின் சார்பு நிறுவனங்களான நிட்டிங், பிரிண்டிங், டையிங், எம்பிராய்டரி என பல்வேறு பணிகளின் மூலமாகவே பின்னலாடை உற்பத்தி முழுமை பெறுகிறது. இத்தகைய சார்பு நிறுவனங்களில் முக்கியமானதாக நிட்டிங் துறை இருந்து வருகிறது. பனியன் துணிகளை உற்பத்தி செய்யும் இந்நிறுவனங்களுக்குக் கூலியை உயர்த்தித் தர பல முறை வலியுறுத்தப்பட்ட நிலையில் ஜி.எஸ்.டி போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி புதிய கட்டண முறையைப் பின்னலாடை நிறுவனங்கள் தவிர்த்து வந்தன.

தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஒரே கூலி வழங்கப்பட்டு வரும் நிலையில் தொழிலாளர் கூலி, மூலப்பொருட்கள் விலை உயர்வால் நிட்டிங் பனியன் துணி உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இன்றும் நாளையும் உயர்த்தப்பட்ட புதிய கட்டணத்தை வழங்க வலியுறுத்தி, பனியன் துணி மற்றும் காலர் உற்பத்தி செய்யும் நிட்மா, சிம்கா சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்த அறிவிப்பால், பனியன் துணி மற்றும் காலர் தயாரிக்கும் 900 நிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் 1 நாளுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான பனியன் துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.