கோவை : வெள்ளலூர் அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற போது பொதுமக்களிடம் சிக்கிய கொள்ளையர்களைக் கைது செய்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, வெள்ளலூர் பட்டணம் சாலையைச் சேர்ந்தவர் தமயந்தி(35). இவர் முல்லை நகரில் நடந்து சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவருடைய கழுத்தில் இருந்த 3 பவுன் நகையைப் பறிக்க முயன்றனர். இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அந்த இரண்டு பேரையும் மடக்கிப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து தாக்கினர்.
இதையடுத்து, அவர்களை போத்தனூர் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் சென்னையைச் சேர்ந்த விஜயராகவன் (25), கார்த்திக் (24), என்பது தெரிய வந்தது. சாய்பாபா காலனியைச் சேர்ந்த ரமாதேவி (71), என்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையைப் பறித்து விட்டு தமயந்தியிடம் நகை பறிக்க முயன்றபோது, அவர்கள் சிக்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், ரூ.300 மற்றும் 4 பவுன் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தொடரப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்த வழக்குத் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது :- சென்னை வியாசர்பாடியை சேர்ந்த விஜயராகவன், கார்த்திக் ஆகிய இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். சரியான வேலைக் கிடைக்காததால் போதிய வருமானமின்றி சுற்றியுள்ளனர்.
இதையடுத்து, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் செயலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர். இது கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இவர்கள் மீது சென்னையில் மட்டும் 20 -க்கும் மேற்பட்ட நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. அவர்கள் மீது குண்டர் சட்டம் கூட பாய்ந்துள்ளது. மேலும், இருவரும் சென்னை சிறையில் இருந்து கடந்த ஜூலை மாதம்தான் வெளியே வந்துள்ளனர். இதனால் கையில் செலவுக்கு பணம் எதுவும் இல்லை.
எனவே, கோவையில் உள்ள தனது நண்பரைத் தொடர்பு கொண்டு பேசி கோவை வந்துள்ளனர். அன்று தங்களின் நண்பரைப் பார்க்கச் செல்லும்போது ரமாதேவியிடம் செயினைப் பறித்துள்ளனர். அதற்கு முன்பாகவே கடலூரைச் சேர்ந்த பாபு (38), என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300 பறித்துள்ளனர். இதையடுத்து, தமயந்தியிடம் நகை பறிக்க முயன்ற போது பொதுமக்களிடம் சிக்கியுள்ளனர்.
இவர்கள் கோவை மற்றும் பிறபகுதிகளில் வேறு ஏதேனும் நகை பறிப்பு, திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்களா? அவருடைய நண்பர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறோம், இவ்வாறு காவல்துறையினர் கூறினார்கள்.