கோவை : மனித-விலங்கு மோதல்களைக் குறைக்க வன பகுதிலியிருந்து வந்த காட்டு யானைகளை அப்புறப்படுத்தும் பணிகளை வனத்துறை அதிகாரிகள் மீண்டும் தொடங்கினர்.

கோவை தடாகம் பகுதியில், அடிக்கடி காட்டு யானைகள் வந்து போவது வாடிக்கையாகிவிட்டது. இருந்தாலும், விவசாயிகளுக்கு அவை ஏற்படுத்தும் சேதங்களை வாடிக்கையாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை. அதனால் வனத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு மேலாகக் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக பொம்மன், விஜய், சேரன் என்ற ஆகிய 3 யானைகள் பெரியதடாகம், அனுவாவி சுப்ரமணியார் கோயில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டன.

வனத்துறை அதிகாரிகள், முதலில் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தாய் யானையும் குட்டி யானையும் வெளியேற்றுவார்கள் என்று தெரிகிறது. பிறகு, பிரித்து ஆளும் முறைப்படி கும்கிகளைக் கொண்டு அமைதியான முறையில் ஆண் யானை சின்னதம்பியை முதலாதாகவும், விநாயகத்தை அதன் பின்பும் பிடிக்கவுள்ளனர்.

மேலும், வனத்துறையினர் மீண்டும் தொடங்கிய இந்த முயற்சியில் முதுமலையிலிருந்து வந்த புதிய வரவு வசீம் என்ற கும்கி யானையும் ஈடுபடவுள்ளது.