கோவை : உடல்தானம் குறித்த விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் வகையில் மூதாட்டியின் உடலை உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.
கோவை : உடல்தானம் குறித்த விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் வகையில் மூதாட்டியின் உடலை உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் மலரினியன். இவர், பத்திரப்பதிவு எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். 70 வயதான இவரது தாயார் கன்னீசுவரி உடல் நலக்குறைவினால் நேற்று உயிரிழந்தார். பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றி வரும் இக்குடும்பத்தினர் கன்னீசுவரியின் இறுதிச்சடங்குகள் எவ்வித சம்பிரதாயங்கள் இன்றி நடத்தினர். இதையடுத்து, அவரது உடலை தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி, கன்னீசுவரியின் உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.

ஆண்டுதோறும் ஒரு மருத்துவக்கல்லூரியில் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக 12 உடல்கள் தேவைப்படுவதாகவும், மண் தின்னும் உடலை மாணவர்கள் பயன்படும் வகையில் தானமாக வழங்கி இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.