குன்னூரில் நிகழ்ந்த கார் விபத்தில் தி.க. மாநில பொருளாளர் பிறைநுதுல் செல்வி உயிரிழப்பு

நீலகிரி : குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கிய திராவிட கழக மாநில பொருளாளர் பிறைநுதல் செல்வி உயிரிழந்தார்.


நீலகிரி : குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கிய திராவிட கழக மாநில பொருளாளர் பிறைநுதல் செல்வி உயிரிழந்தார்.

குன்னூர் ரெய்லிகாம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் கவுதமன். இவரது மனைவி டாக்டர் பிறைநுதல்செல்வி (72). இவர்களுக்கு இனியன் என்ற மகனும், யாழிசை என்ற மகளும் உள்ளனர். டாக்டர் பிறைநுதல்செல்வி திராவிடர் கழகத்தின் மாநில பொருளாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தனது கணவருடன், பிறைநுதல்செல்வியும் திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்னை சென்றனர். விழாவை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து திருப்பூருக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தனர்.

பின்னர், இன்று காலை திருப்பூரிலிருந்து கார் மூலமாக குன்னூர் வந்து கொண்டு இருந்தனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி அருகே கார் வந்த போது எதிரே உதகையிலிருந்து கோவை நோக்கி வந்த கார் ஒன்று திடீரென்று மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாததால், சமரசமாக இருதரப்பினரும் சமாதானமாக சென்றனர். இந்த விபத்தின் போது, பிறைநுதல்செல்வி காரில் பெல்ட் போட்டு வந்ததால், கார் மோதிய வேகத்தில் அதன் கொக்கி வயிற்றில் பட்டுள்ளது. இதனால், அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பும் இருந்தால் உடனடியாக சிகிச்சைக்காக குன்னூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மரணமடைந்த திராவிட கழக மாநில பொருளாளர் பிறைநுதல் செல்வியின் சொந்த ஊர் ஈரோடு ஆகும். இவரது தகப்பனார் சுப்ரமணியம், தாய் சிங்காரம்மாள். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி பிறந்த இவர், பி.எஸ்.சி. முடித்துவிட்டு எம்.பி.பி.எஸ். டாக்டர் பட்டம் பெற்றார். அதன் பின்னர், மகப்பேறு மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்றார். இவர், 22 ஆண்டுகளாக குன்னுார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றினார். பின்னர், கோத்தகிரி தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்தார். இதைத்தொடர்ந்து, மாவட்ட சுகாதார இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது கணவர் கவுதமன் குன்னுார் அரசு மருத்துவமனையில் முக அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார். அதன்பின்னர், உதகை அரசு மருத்துவமனையில் பல்பிரிவில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...