கோவையில் கடந்த 24 மணிநேரத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழப்பு

கோவை : கோவை அரசு மருத்துவமனையில், கடந்த 24 மணிநேரத்தில் பன்றிக்காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில், கடந்த 24 மணிநேரத்தில் பன்றிக்காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் நிலவி வரும் பருவநிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, பெரும்பாலானோர் கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24-ம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கந்தசாமி என்பவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கந்தசாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல, கோவை, சூலூர் அப்பநாயக்கம்பட்டியைச் சேர்ந்த விஜயலட்சுமி (50) கடந்த 9-ம் தேதி பன்றிக் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இதேபோல, சூலூர் முத்துகவுண்டன் புதூரைச் சேர்ந்த முருகதாஸின் மனைவி மணியம்மாள் (38). இவர், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த 2-ம் தேதி முதல் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேலும், கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக 23 பேரும், டெங்கு காய்ச்சல் காரணமாக 4 பேரும், வைரஸ் காய்ச்சல் காரணமாக 63 பேரும் என மொத்தம் 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...