திருப்பூர் : திருப்பூரில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட 2,034 கால்நடைகள் முற்றிலுமாக குணமடைந்துள்ளதாகவும், இதற்காக அமைக்கப்பட்ட 45 மருத்துவ குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர், காங்கேயம் வட்டம், நத்தக்காடையூர், பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில், டேக்வான்டோ, வாள் சண்டை, குத்துச்சண்டை, வளைபந்து போட்டிகள் நடைபெறுகிறது, இன்று முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும். இப்போட்டியில், 15 மண்டலங்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஒரு மண்டலம் என மொத்தம் 16 மண்டலங்களைச் சேர்ந்த 1, 860 மாணவர்கள், 1, 924 மாணவிகள் என மொத்தம் 3, 784 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல, சர்வதேச அளவிலான நடுவர்கள் 160 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கோமாரி நோயால் 2,627 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், 2,034 கால்நடைகள் நோயிலிருந்து முற்றிலுமாக குணமடையச் செய்யப்பட்டுள்ளது. 593 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 45 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நோயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தாண்டு, மேலும் 22 அம்மா ஆம்புலன்சுகள் கால்நடைத்துறைக்கென கொண்டு வரப்பட இருக்கிறது," என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.