திருப்பூர் : விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வரும் 17-ம் தேதி, கொங்கு மண்டலத்தின் 8 மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் இணைந்து புதிய மின்கோபுரங்கள் அமைக்க விவசாய நிலங்களை அழித்து வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள், இச்செயலுக்கு மாற்றாக நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள் லைன் மூலம் மின் கோபுரங்கள் அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். மேலும், மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்காமல் தொடர்ந்து, கொங்கு மண்டல விவசாயிகளை பாதிக்கும் வகையில் விவசாய நிலங்களில் அதிகாரிகள் மின்கோபுரங்கள் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கண்டிக்கும் விவசாயிகளை காவல்துறையினரை வைத்து மிரட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனவே, இச்செயல்களைக் கண்டிக்கும் விதமாகவும், இதற்கான மாற்றுத்திட்டத்தை பயன்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றக்கோரியும் கோவை, திருப்பூர் உள்பட கொங்கு மண்டலத்தின் 8 மாவட்டங்களில் 17 இடங்களில் விவசாய அமைப்புகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.