கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் போதிய வகுப்பறைகளின்றி மாணவிகள் தவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,010 மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 43 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் 1975-ம் ஆண்டு கீழ் தளத்தில் ஆய்வுக்கூடம், இரண்டு வகுப்பறை மற்றும் முதல் மாடியில் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டன. மாடியில் உள்ள வகுப்பறைகளில் ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

சரியான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், பள்ளிக் கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுக் காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாகப் பெய்யும் மழை காரணமாக மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தன. இதையடுத்து, பாதுகாப்பு கருதி மாடி வகுப்பறைகளுக்கு யாரும் செல்ல இயலாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது, “மாணவிகள் பயில அவசரமாக 5 புதிய வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. இதைக் குறிப்பிட்டு நகராட்சிக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், தொகுதி வளர்ச்சி நிதியில் புதிய வகுப்பறைகள் கட்டவும் பள்ளியைப் புதுப்பிக்கவும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்,” என்றனர்.