புத்தகப் பையின் எடையளவு குறித்த விவகாரத்தில் தனியார் பள்ளிகள் அலட்சியம் : காற்றில் பறக்கிறதா நீதிமன்றத்தின் உத்தரவு

சென்னை : பள்ளி மாணவர்களின் புத்தகப் பையின் எடை அளவை நிர்ணயம் செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இந்த உத்தரவு குறித்த நடவடிக்கைக்கு அலட்சியம் காட்டி வருகின்றன.

சென்னை : பள்ளி மாணவர்களின் புத்தகப் பையின் எடை அளவை நிர்ணயம் செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இந்த உத்தரவு குறித்த நடவடிக்கைக்கு அலட்சியம் காட்டி வருகின்றன.

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளி கல்வி முறையை ஒழுங்குபடுத்தும் விதமாக, பள்ளி மாணவர்களின் பள்ளி புத்தகப் பையின் எடை அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. குறிப்பாக, ஒன்றாம் வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களின் புத்தகப் பை 1.5 கிலோவும், 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தகப் பையின் எடை 2 முதல் 3 கிலோ வரையிலும் இருக்கலாம்.

6 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை 4 கிலோவாகவும், 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 4.5 கிலோவாக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை 5 கிலோ என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு வேறு ஏதேனும் கூடுதல் புத்தகங்களையோ, நோட்டு புத்தகங்களையோ எடுத்து வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தக் கூடாது.

மேலும், 1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்றும், மொழிப்பாடம் மற்றும் கணிதப் பாடங்களை தவிர்த்து பிற பாடங்களை எழுதி வர கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 



ஆனால், மாணவர்களின் நலன் மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கோவை மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் செயல்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும், சில பள்ளிகள் மாணவர்கள் நலனில் குறைந்த அளவு அக்கறையே கொண்டுள்ளன. மாணவர்களின் சுதந்திரத்தைப் பறித்து, பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, பள்ளியின் புகழ் பரவ வேண்டும் என நோக்கில் மட்டுமே செயல்படுகின்றன.

"சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தனியார் பள்ளிகள் அவமதிக்கின்றன. நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, வெயில் காலங்களில் அதிக எடைகளை சுமந்தபடி மாணவர்கள் பள்ளிக்கு வருவதைப் பற்றி பள்ளி நிர்வாகத்தினர் சிந்திக்க வேண்டும்," இவ்வாறு கூறுகிறார் சாய்பாபா காலணியைச் சேர்ந்த பள்ளி மாணவரின் தந்தை மணி.

கடந்த 2016-ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஆணைப்படி, 25 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புத்தகப்பையின் அளவு குறைக்கப்பட்டது. அதோடு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு ஏதுவாக டேப்லட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...