பருத்தி வாங்கிப் பல கோடிகளை மோசடி செய்த பிரபல தொழிலதிபர் கோவையில் கைது

கோவை : கோவையில் பருத்தி வாங்கிப் பல கோடிகளை மோசடி செய்த தொழிலதிபர் நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

கோவை : கோவையில் பருத்தி வாங்கிப் பல கோடிகளை மோசடி செய்த தொழிலதிபர் நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

 

ராஜபாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 45). பருத்தி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். உடுமலைப்பேட்டை அருகே உள்ள இலுவன் புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஷேக் அப்துல் காதர் (38). இவர் சீனிவாசனிடம் பருத்தி வாங்கி ரூ.2 கோடி வரைப் பாக்கி வைத்துள்ளார். இந்தத் தொகையை கேட்ட போது புதிதாக மில் வாங்குவதாகவும், வாங்கியதும் பணத்தை மொத்தமாகக் கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளார். இதனை நம்பி மேலும் ரூ.1.25 கோடி சீனிவாசன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, சீனிவாசன் தன்னுடைய பணம் ரூ.3.25 கோடி ரூபாயை ஷேக் அப்துல் காதரிடம் திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது காதர் பணத்தை திருப்பித் தராமல் இருந்திருக்கிறார். இதனால் பணத்தை தராமல் மோசடி செய்துள்ளதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை குற்றப்பிரிவு போலீசில் சீனிவாசன் புகார் செய்தார். 

காவல்துறை உதவி ஆணையர் சந்திரசேகர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, காதரை கண்டுபிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த தேடுதலில், கோவை டி.வி.எஸ் நகர் பகுதியில் ஷேக் அப்துல் காதர் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும், இவர் மீது கொலை உள்ளிட்ட சில வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...