உயிரிழந்த கணவரின் ஓய்வூதியத்தை தனக்கு வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை முயற்சி

கோவை : உயிரிழந்த கணவரின் ஓய்வூதியத்தை தனக்கு வழங்கக் கோரி மூதாட்டி ஒருவர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மரத்தில் தான் அணிந்திருந்த சேலையால் தூக்கிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை : உயிரிழந்த கணவரின் ஓய்வூதியத்தை தனக்கு வழங்கக் கோரி மூதாட்டி ஒருவர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மரத்தில் தான் அணிந்திருந்த சேலையால் தூக்கிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



கோவையை அடுத்த செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த குந்நி முகம்மது என்பவரது இரண்டாவது மனைவி கண்ணம்மா என்கிற ரம்லத்.

நெடுஞ்சாலை துறையில் மேஸ்திரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற குந்நி முகம்மது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவருக்கு வரவேண்டிய பென்ஷன் தொகை முதல் மனைவிக்கு வந்து கொண்டிருந்த நிலையில், முதல் மனைவியும் உயிரிழந்ததால் கணவர் குந்நி முகமது பென்சனை தனக்கு தர வேண்டும் என ரமலத் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக அவர் கோரிக்கை விடுத்தும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று பிற்பகல் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள புளிய மரத்தில், மூதாட்டி திடீரென தான் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து, தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்தவர்கள் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...