கோவை : கோவை ஷாப்பிங் திருவிழா வரும் டிசம்பர் 22-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : கோவை ஷாப்பிங் திருவிழா வரும் டிசம்பர் 22-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை ஷாப்பிங் திருவிழாவின் தலைவர் கே.வி. கணபதி கூறியதாவது :- டிசம்பர் 22-ம் தேதி தொடங்கும் இந்த திருவிழாவை, கடந்த ஆண்டை விட கூடுதலான மக்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
இந்த ஆண்டுக்கான ஷாப்பிங் திருவிழா முற்றிலும் மாறுபட்டுள்ளது. கோவை மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி திரளான மக்களின் கூட்டம் இருக்கும் என்பதால், ரூ. 70 கோடி இலாபத்தை வர்த்தகர்கள் பெறுவார்கள் என நம்புகிறோம். கோவை ஷாப்பிங் திருவிழாவில் சுமார் 500 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட இருக்கின்றன,' என்றார்.