கோவை : கோளராம்பதி குளத்தில் வளரும் வெவ்வேறு இன வாத்துக்கூட்டங்கள் குளத்தின் பல்லுயிர் பெருக்கம் மேம்பாடு அடைய இன்றியமையாத காரணங்களாக இருக்கின்றன.

குளம், ஏரி போன்ற நீர்த்தேக்கங்கள் விவசாயத்திற்கு மட்டுமில்லாமல் கால்நடைகளுக்கும் தேவையாக உள்ளன. ஆனால், குளத்தையும் அதில் உள்ள உயிரினங்களையும் மேம்பாடு அடையச் செய்ய வாத்துகள் அவசியம் எனச் சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை. சில இனத்தைச் சேர்ந்த வாத்துகள் குளத்தின் பல்லுயிர் பெருக்கம் மேம்பாடு அடைய முக்கிய காரணங்களாகும்.
ஒரு குளத்தில் வாத்துகள் இருந்தால் அங்கு மற்ற பறவைகளும், சிறு உயிரினங்களும் வந்து இயல்பாகப் புழங்கி செல்லும் வாய்ப்பு அதிகம். பேரூர் அருகே உள்ள கோளராம்பதி குளம் ஆறு வகையான வாத்து இனங்களையும், மற்ற பறவைகளையும் நிரம்பப் பெற்று சுற்றுச்சூழலை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.
நீலச்சிறகு வாத்து, வடக்கு பிந்தில், வடக்கு ஷோவெலர், விசிலிங் வாத்து, இந்திய புள்ளி வாத்து மற்றும் குள்ள வாத்து உள்ளிட்ட ஆறு வாத்து இனங்கள் ஆரவாரமில்லாமல் இங்கு நிம்மதியாக நீந்திக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் வாத்து இனமாக இருப்பினும் வெவ்வேறு வகைகளைச் சேர்ந்தவை ஆகும். இவற்றுக்கென்று தனித்தனிப் பண்புகள், சூழலுக்கேற்றார் போல தகவமைத்துக் கொள்ளும் திறனும் மாறுபடும்.

இது குறித்து ஏரிகளில் வசிக்கும் பறவைகள் குறித்துப் பதிவு செய்யும் என்.ஜி.ஓ (ஓசை), கெளதம் பிரபாகர் கூறுகையில், "எல்லா வாத்துகளும் ஒரே மாதிரியானவை அல்ல, தனித்தனி சிறப்பில்புகள் உடையவை. நீர் அல்லிகள் சூழ்ந்த குளம் சிறந்த வாழ்வாதாரமாக உள்ளது. அவற்றின் உணவு தாவரங்களில் புல், பாசி வகைகளும், உயிரினங்களில் புழுப் பூச்சிகளும் தான். எப்போதுமே வாத்துகள் பகலில் மந்தமாகவும், இரவில் செயலாற்றல் அதிகம் கொண்டவையாகவும் இருக்கும்," என்றார்.
மேலும், பேசிய அவர், "கடந்த வருடம் ஏரிகளைப் பராமரிக்கும் பணிகளில் ஏரியின் 30% பகுதி தூர்வாராமல் விடப்பட்டுள்ளது. இதனால் குளத்தில் களைகள் போல வேண்டாத செடிகள் வளர்ந்துள்ளன. இம்மாதிரியான களைகளால் பறவைகளுக்கு உணவைப் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அவை அங்கிருந்து வேறு இடங்களுக்கு இரைகளுக்காக இடம்பெயரும் சூழல் உருவாக்கப்படுகிறது. " என்கிறார்.
பறவைகள் கண்காணிப்பாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் கூறுகையில், "ஒரு ஏரியில் அதிக எண்ணிக்கையில் வாத்துகள் இருக்கிறதெனில் அது பல்லுயிர்பெருக்கம் செழுமையாக உள்ளதைக் குறிக்கிறது. வாத்துகள் தண்ணீரில் உள்ள பாசி வகைகள், சிறு நீர்வாழ் உயிரினங்கள், பூச்சியினங்களை உண்டு வாழ்கின்றன. வாத்துகளின் வரத்துக் குறையும் போது பூச்சியினங்கள், தும்பி வகைகள் அதிகரிக்கும். எனவே, உணவுச் சங்கிலி தடைப்பட்டு குளங்களின் சமனிலை குழைகிறது.

மேலும், வடக்கு ஷோவெல்லர் வாத்துகள் செடி, கொடிகளில் உள்ள பூச்சிகளை உண்டு வாழக்கூடியது. இவைகள் பெரும்பாலும் குளத்தங்கரைக்கு அருகில் உள்ள புல்வெளிகளில் வாழும் உடலமைப்பைக் கொண்டது. எல்லா வகை வாத்துகளுமே வித்தியாசமான பண்புகளைக் கொண்டிருப்பதால், அவை நீந்தும் குளங்களில் பூச்சிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் சின்ன தடை ஏற்பட்டாலும் மொத்த குளத்தின் பல்லுயிர் தன்மையும் பாதிக்கப்படுவதால் கவனமாகப் பராமரிக்க வேண்டும்," என்கிறார்,கிருபானந்தி.

இயற்கையில் எதுவுமே தனிச்சையாக இல்லை. ஒவ்வொன்றும் மற்றொன்றோடு இணைந்து காணப்படுவதால், ஒரு அமைப்பை நாம் தொந்தரவு செய்யும் போது அதனுடைய பாதிப்பு மற்றொன்றில் பிரதிபலிக்கும். எனவே, ஒரு குளத்தில் வளரும் வாத்துகள் எண்ணிக்கைக் குறையும் போது, அங்குள்ள பூச்சியினங்கள் கட்டுப்பாட்டில் இருந்து விலகுகிறது.

குளத்தில் இருந்து நீர் அல்லித் தாவரங்களை வீட்டை அழுகுப்படுத்த பொதுமக்கள் எடுத்துச் செல்லுவது, கழிவுப் பொருட்களை போடுவது, அரசு குளத்தைப் பராமரிக்கத் தவறுவது அனைத்துமே சூழலின் தன்மையை, வாத்துக்களின் இனப்பெருக்கத்தை, பிற பறவைகளின் வாழ்வாதாரத்தைத் தடை செய்கிறது. இவையனைத்தையும் சரிசெய்யும் போது, இயல்பாகப் பறவைகள் கோளராம்பதி போன்ற ஏரிகளில் வந்து தங்கும். ஏரிகளில் பல்லுயிர்பெருக்கம் வளமையாக இருக்கும்.
மேலும், நீர் அல்லிகளைக் குளத்தில் எவ்வித இடையூறும் இல்லாமல் வளரவிடுவதே வாத்துகளையும், பல்லுயிர் தன்மையையும் சமனிலையில் வைக்க உதவும்.

Photo Credit: Gowtham Prabhakar