கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருவ மாற்றங்கள் காரணமாக பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து கடந்த 24-ம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கந்தசாமி என்பவர் பன்றி காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கந்தசாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல, கோவை, சூலூர் அப்பநாயக்கம்பட்டியைச் சேர்ந்த விஜயலட்சுமி (50.) கடந்த 9-ம் தேதி பன்றி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
மேலும், கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக 23 பேரும், டெங்கு காய்ச்சல் காரணமாக 4 பேரும், வைரஸ் காய்ச்சல் காரணமாக 63 பேரும் என மொத்தம் 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.