திருப்பூர் : தாராபுரத்தில் வீட்டுமனைக்கு பட்டா வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவலர் கார்த்திக் வேல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர், தாராபுரம் அருகே உள்ள கோவிந்தபுரம் வெள்ளி தோட்டத்தை சேர்ந்த செந்தில்குமார். இவர் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் ஓர் தனியார் வீட்டுமனை ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காலி வீட்டுமனைக்கு பட்டா வேண்டி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தாராபுரம் தனி வட்டாச்சியர் அலுவலத்தில் உள்ள நில அளவலர் கார்த்திக் வேல் என்பவரிடம் பேசியுள்ளார்.

அதற்கு நில அளவளர் கார்த்திக் வேல், "ரூ.10 ஆயிரம் பணம் கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் கொடுத்துவிடுகிறேன்" என பதிலளித்துள்ளார். இதையடுத்து செந்தில்குமார் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக, செந்தில் குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்துள்ளனர்.
செந்தில்குமார் அந்தப் பணத்தை பட்டா பெற வேண்டி கார்த்திக்வேலிடம் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நில அளவலரை கையும் களவுமாக பிடித்து பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டனர். பின்பு அவரைக் கைது செய்தனர்.