கோவை : மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ. 20 லட்சம் செலவில் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை மாநிலங்களைவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஒ.கே.சின்னராஜ் திறந்து வைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் நிலையில், இங்கு சிறுநீரக சுத்திகரிப்பு நிலையம் இல்லை. இதனால், கோவை அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலை நிலவி வந்தது. இருப்பினும், பல நோயாளிகள் ஏற்கனவே காத்திருக்கும் நிலையில், இங்கிருந்து செல்பவர்களுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு வந்நது. இதனையடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்று ரூ. 20 லட்சம் மதிப்பில் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை தமிழக சுகாதாரத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டது. இந்த மையத்தை இன்று மாநிலங்களைவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஒ.கே.சின்னராஜ் திறந்து வைத்தனர். வாரம்தோறும் திங்கள் முதல் சனி வரை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறுநீரக சுத்திகரிப்பு செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன்மூலம், இரத்த சுத்திகரிப்புக்கு கோவைக்கு செல்லும் ஏழை மக்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.