கோவை : மனித - வனவிலங்கு மோதலை தடுக்க அமைச்சர் தலைமையிலான கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித - வனவிலங்கு மோதலை தடுக்க அமைச்சர் தலைமையிலான கூட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாய சங்க கோயமுத்தூர் மாவட்டக்குழு தலைவர் சு.பழனிச்சாமி கூறுகையில், "கோவை மாவட்டத்தில் வனவிலங்கு நடமாட்டத்தால் விவசாய நிலங்களில் உள்ள தானியங்கள் சேதம் அடைந்து விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் உயிர் மற்றும் பயிர்ச்சேதம் குறித்து முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
மேலும், கடந்த 1-ம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மனித - வனவிலங்கு மோதலை தடுக்க பல்வேறு முடிவுகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனை தொடர்பாக வனத்துறை அமைச்சர், உள்ளாட்சித் துறை அமைச்சர், வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து விவசாய அமைப்புகள், வன ஆர்வலர்கள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த வேண்டும், என்றார்.