கோவை : 2 மாதங்களுக்கு முன்பு மாயமானவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அவரது உடலை மீட்டுத் தரக்கோரி உறவினர்கள் கண்ணீருடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த வணிகரான ஜெயவேணு என்பவர் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை வந்துள்ளார். ஆனால், அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கோவை துடியலூர் காவல் நிலையத்தில், இது தொடர்பாக புகார் அளித்தனர். ஆனால், ஜெயவேணு தொடர்பாக இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு அருகில் உள்ள கிணறு ஒன்றில் அவரது உடல் புதைக்கப்பட்டு குப்பைகளால் நிரப்பப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.
ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று வணிகர் சங்க பேரமைப்பினருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஜெயவேணுவின் தாய் பிரேமா, மனைவி ஜெயதீபா, குழந்தைகள் கிருத்திக்ராஜ், கிருத்திகா ஆகியோர் கண்ணீருடன் ஜெயவேணுவை கண்டுபிடித்து தருமாறு மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது :- ஜெயவேணுவின் உடலை மீட்டுத்தர போலீசார் தாமதிக்கின்றனர். குற்றவாளிகளைப் பாதுகாக்க போலீசார் முயல்கின்றனர். ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவதில் உள்நோக்கம் இருக்கிறது, என்றனர்.