கோவை : வீட்டில் இருந்து தொலைந்து போன மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத சடலங்களை உறவினர்களிடம் கொண்டு சேர்த்து மத்திய அரசின் விருதை (Good practice and success stories) பெற்றுள்ளார் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமை காவலர்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில், மாநில குற்றப்பதிவேடு கூடத்தின் இணைப்பு பணியாற்றி வருகிறார் தலைமை காவலர் கே.பாலா மணி. தமிழகம் முழுவதும் பதிவாகும் மாயமானவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சி.சி.டி.என்.ஸ் (Crime and Criminal Tracking Networking System) அமைப்பில் இணைப்பு பணியை (மேற்குமண்டலம்) தொடரும் இவர், பல நூறு மனிதர்களின் வேதனைகளையும், மனக்குமுறல்களையும் தீர்த்து வைத்துள்ளார்.
மனநலம் பாதித்தவர்கள் மற்றும் வீட்டில் சண்டையிடும் சிறு வயதினர் அவர்களது குடும்பத்தார் எதிர்பாராத நேரத்தில் வீட்டை வீட்டு வெளியேறிவிடும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழும் கசப்பான சம்பவம். இவ்வாறான நேரத்தில் மிகுந்த மன உலைச்சலை அனுபவிக்கும் அவர்களது குடும்பத்தார், இது தொடர்பாக காவல்நிலையங்களில் புகார் அளிக்கின்றனர்.
இவ்வாறு பெறப்படும் புகார்கள் www.tnpolice.gov.in/CCTNSNTCSDC என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த இணையத்தை தமிழக போலீசார் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் வைத்திருப்பவர்கள் இயக்க முடியும். மாயமானவர்கள் தொடர்பான விவரங்கள் பதிவானவுடன், உயிர் இழந்தவர்கள் யார் என்று தெரியாமல் இருக்கும் சூழலிலும், அவர்களது விவரங்கள், வயது (ஏறத்தாழ), புகைப்படம், துணையின் நிறம் போன்ற விவரங்கள் இந்த இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
வழக்கு விவரங்கள் கிடைத்தவுடன் சி.சி.டி.என்.ஸ் பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட நபரை தேடும் பணியை தொடங்குகின்றனர். அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவான வழக்கு விவரங்கள், மாயமான மற்றும் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களின் அடிப்படையில், இணையதள பக்கத்தில் பதிவான விவரங்களோடு ஒப்பிட்டு, அவர்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கின்றனர்.
அதிக வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய பணி இது என்கிறது காவல்துறை வட்டம். இந்தப் பணியில்தான், அதிகமானவர்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தமைக்காக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருதினை பெற்றுள்ளார் பாலாமணி.
இந்திய அளவில் இந்த விருது மொத்தம் 57 காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில், இரண்டே பெண்கள். அந்த இரண்டில் ஒருவர் தான் இந்த பெண் தலைமை காவலர். கடந்த அக்டொபர் மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற கருத்தங்கு மற்றும் விழாவில் இந்த விருதினை பெற்று தமிழகத்திற்குப் பெருமை தேடித்தந்துள்ளார்.
இது குறித்து பாலாமணி சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :- எனது பணியில் அடையாளம் தெரியாமல் இருந்த 51 சடலங்களை முறையாக அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளேன். வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்கள் மற்றும் சிறார்கள் 8 பேரை மீட்டு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் சேர்த்துள்ளேன்.
தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொண்டும், புகார்தாரர்களிடம் பேசியும், மாயமானவர்களை தேடுவது என்பது சிரமம் தான். இருந்த போதிலும், அந்த மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு பணியாற்றியதால் வழக்குகளை விரைந்து முடிப்பது சாத்தியமானது. இதற்கு எங்கள் பிரிவு அதிகாரி ஏ.டி.ஜி. சீமா அகர்வால் பெரும் உதவி செய்தார். விருதினை பெற்றது முதல் பல்வேறு அதிகாரிகளும் எனக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பொதுவாக, தமிழகத்தில் மாதம் ஒன்றிற்கு இது போன்று 300 முதல் 500 வழக்குகள் வரை பதிவாகின்றன. இதனை காவல்துறை முடிந்தவரை விரைவாக விசாரித்து தீர்வு காணும். எங்கள் இணையதள முகவரியை பொதுமக்கள் பார்க்கலாம். அதில், காணாமல் போனவர்கள் தமிழகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் மீட்கப்பட்டிருந்தால், அந்த விவரம் பதிவாகி இருக்கும்.
ஆகவே, பொதுமக்கள் இதனைப் பயன்படுத்தி, மற்றவர்களுக்கும் உதவி செய்ய முன்வர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்," என்றார்.