குழந்தைகளின் இறுதித் தேர்வு வரை வீடுகளை அகற்ற காலஅவகாசம் தேவை : நொய்யல் காலனி மக்கள் மனு

கோவை : தங்களது குழந்தைகளின் பள்ளி இறுதி ஆண்டு தேர்வு வரை வீடுகளை அகற்ற காலஅவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நொய்யல் காலனி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : தங்களது குழந்தைகளின் பள்ளி இறுதி ஆண்டு தேர்வு வரை வீடுகளை அகற்ற காலஅவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நொய்யல் காலனி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது. கோவையில் பல்வேறு இடங்களில் வீடுகள் அகற்றப்பட்டு, அங்கு வசித்து வந்த பொதுமக்களுக்கு அரசு சார்பில் மாற்று இடங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளை காலி செய்ய காலஅவகாசம் கோரி வரும் நிலையில், இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நொய்யல் காலனி பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர், குழந்தைகளின் இறுதி ஆண்டு தேர்வு முடியும் வரை வீடுகளை அகற்றுவதில் காலஅவகாசம் அளிக்க வலியுறுத்தி, பள்ளி பயிலும் தங்களது குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். 



இது குறித்து அவர்கள் கூறுகையில், "150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். தற்போது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் 21 நாட்களுக்குள் காலி செய்ய சொல்லி வற்புறுத்துகின்றனர். 

மேலும், குழந்தைகள் படிப்பும், வேலை வாய்ப்புகள் இழக்கும் சூழ்நிலை உள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும். செங்கதுறையில் குடிசை மாற்று வாரியம் மூலம் வழங்கப்பட்ட இடத்திற்கு குடிபெயர 2019-ம் ஆண்டில், இறுதி ஆண்டு தேர்வு வரை கால அவகாசம் அளிக்க வேண்டும், இவ்வாறு கூறினர். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...