கள் விற்பனையை ஆதரிக்கும் கட்சிக்கு பொதுத்தேர்தலில் ஆதரவு : கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

கோவை : அடுத்து வரும் பொதுத் தேர்தலில் கள் விற்பனையை ஆதரிக்கும் கட்சிக்கு, ஆதரவு தர முடிவு செய்துள்ளதாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை : அடுத்து வரும் பொதுத் தேர்தலில் கள் விற்பனையை ஆதரிக்கும் கட்சிக்கு, ஆதரவு தர முடிவு செய்துள்ளதாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் என்.ஏ. பொன்னுசாமி தலைமியிலான விவசாயிகள் கூட்டம் இன்று கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் என்.ஏ. பொன்னுசாமி, அடுத்து வரும் பொதுத் தேர்தலில் கள் விற்பனையை ஆதரிக்கும் கட்சிக்கு, ஆதரவு தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு தருகிறோம். 



மேலும், கடந்த 3 ஆண்டு காலமாக, சங்கத்தின் கோவை மாவட்ட தலைவராக செயல்பட்டு வரும் ஏ.எஸ். பாபு குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதோடு, அவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகக் கூறிவரும் மாநில துணை தலைவரை வன்மையாகக் கண்டிக்கிறோம், இவ்வாறு அவர் கூறினார். 

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கும், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காகவும் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், தேசிய நதிநீர் இணைப்பை செயல்படுத்த வேண்டும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை சுட்டுக் கொள்வதை தவிர்த்து விட்டு, அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...