உதகையில் தொடர் பனிப்பொழிவால் நிலவும் கடும் குளிர் : பகல்நேரத்திலேயே நெருப்பு மூட்டி குளிர் காயும் பொதுமக்கள்

நீலகிரி : உதகையில் கடும் குளிர் நிலவுவதால் பனியன், தொப்பி, உள்ளிட்ட வெம்மை ஆடைகளை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதோடு, பகல் நேரத்திலேயே நெருப்பு மூட்டி குளிர் காய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : உதகையில் கடும் குளிர் நிலவுவதால் பனியன், தொப்பி, உள்ளிட்ட வெம்மை ஆடைகளை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதோடு, பகல் நேரத்திலேயே நெருப்பு மூட்டி குளிர் காய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

இயற்கை எழில்கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது உறை பனியின் தாக்கம் அவ்வப்போது காணப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக உதகை, தலைகுந்தா, குதிரை பந்தய மைதானம், தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகள், பனி பொழிவு காரணமாக, இன்று காலை மினி காஷ்மீர் போல் காட்சியளித்தது. உறை பனி பொழிவு காரணமாக கடும் குளிரின் தாக்கம் அதிகம் காணப்படுவதால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனர். 

இதேபோன்ற காலநிலை தொடர்ந்து காணப்பட்டால், தேயிலைசெடிகள், காய்கறிகள் கருகி விடும் அபாயம் உள்ளது. பொதுவாக, டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து தான் உறைபனி பொழிவு இருக்கும் நிலையில், தற்போது குறைந்த அளவு 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்படுகிறது. 

இந்த ஆண்டு குளிர் காலநிலை சற்று முன்னதாக துவங்கியுள்ளதால், இங்குள்ள லாரி, டாக்ஸி, ஆட்டோ ஓட்டுனர்கள் பகல்நேரத்திலேயே நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து வருகின்றனர். 

மேலும், வடமாநிலத்தவர்களால் தலை சுமையில் விற்பனை செய்யப்படும், வெம்மை ஆடைகளான பனியன்கள், தொப்பிகள் மற்றும் கம்பளி உள்ளிட்ட போர்வைகளை விற்பனை செய்பவர்கள், தற்போது அதிக அளவில் உதகையில் குவியத் துவங்கியுள்ளனர். இந்த கடும் குளிரின் தாக்கம் ஜனவரி மாதம் இறுதி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...