கோவை : ராமநாதபுரம் பகுதியில் உள்ள பஜனை கோயில் அருகே சுமார் ஐந்து மாதங்களான சிசு உயிருடன் சாக்கடையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : ராமநாதபுரம் பகுதியில் உள்ள பஜனை கோயில் அருகே சுமார் ஐந்து மாதங்களான சிசு உயிருடன் சாக்கடையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஜனை கோவில் வீதி பெருமாள் கோவில் மைதானம் அருகே இருக்கும் சாக்கடையில் இன்று காலை சுமார் 5 மாதமான சிசு உயிருடன் கிடந்தது. இதனைக் கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், உடனடியாக கோவை ராமநாதபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரோடு இருக்கும் சிசுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், கண்டெடுக்கப்பட்ட ஐந்து மாதங்கள் ஆன இந்த சிசு ஆண் குழந்தை என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த சிசு தொப்புள் கொடியுடன் அறுந்து கிடந்தது காண்போரையெல்லாம் சோகத்தில் ஆழ்ந்தியது. இந்த சிசு எப்படி இங்கு வந்தது..? இதன் தாய் யார்..? என கோவை ராமநாதபுரம் ஆய்வாளர் லதா தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, உயிருடன் கண்டெடுக்கப்பட்ட அந்த 5 மாத சிசு கோவை அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.