சிறகடித்துப் பாடிய ‘சின்னஞ்சிறு குயில்கள்’ நிறைவு விழா

கோவை : அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தி வந்த குழந்தைகளுக்கான பாட்டுப்பயிலரங்கமான ‘சின்னஞ்சிறு குயில்கள்’ நிறைவு விழா கோவையில் இன்று நடைபெற்றது.

கோவை : அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தி வந்த குழந்தைகளுக்கான பாட்டுப்பயிலரங்கமான ‘சின்னஞ்சிறு குயில்கள்’ நிறைவு விழா கோவையில் இன்று நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்திருந்த 300 மாணவர்களில் இருந்து தேர்ந்தெக்கப்பட்ட 40 மாணவர்களுக்கு ஒரு வருடகாலமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது. ஒருவருடமாக பயிற்சி பெற்ற நாற்பது குழந்தைகள் தங்கள் ஆசிரியர் ஹரிப்ரியா வழிநடத்த சேர்ந்து பாடல்களைப் பாடினர். ஆசிரியர் ஸ்ரீ ரஞ்சனி வயலின் இசைக்க, மாணவர் ஸ்ரீஹரி மிருதங்கம் இசைத்தார்."பொம்ம பொம்மத்தா" , "சம்போ மஹாதேவா" உள்ளிட்ட பிரபலமான பாடல்களை மாணவர்கள் பாடினர். 

நிகழ்வில் பேசிய அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவர் ஜனக மாயாதேவி கூறுகையில், " பல்வேறு சோதனைகள் மற்றும் தேர்வுகளின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது 40 மாணவர்கள் இன்று மேடையேறி நிற்கின்றனர். இதற்காக மாணவர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் வாங்கப்படவில்லை. இந்தப் பயிலரங்கம் சிறப்பாக செயல்பட கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்" என்று குறிப்பிட்டார். 

நிகழ்வில் வாழ்த்துறை வழங்கிய ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் எம். கிருஷ்ணன், "குழந்தைகள் மனதிலிருந்து கள்ளம் கபடமில்லாமல் இன்று பாடியதற்கு கடவுள் இங்கு வந்துதான் ஆகவேண்டும். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். இன்று திருவையாறுபோக வேண்டும் என்ற ஏக்கம் தீர்ந்தது. ஒவ்வொரு குழந்தையும் இந்த பாடல்களை தினமும் வீடுகளில் பாடுவதே நாம் செய்யும் குருதட்சணை ஆகும். செல்லும் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கப்போகும் இந்த பாடல்கள் எங்கும் அன்பையும் ஆன்மீகத்தையும் நிரப்ப வேண்டும்" என்று குழந்தைகளை வாழ்த்துப் பேசினார். 

சிறப்புரை வழங்கிய கலாச்சார அமைச்சகத்தின் தெற்கு மண்டல மைய இயக்குநர் எம்.பாலசுப்பிரமணியம் பேசுகையில், "திருவையாறு ஆராதனை போன்ற இசை நிகழ்ச்சிகள் "சப்தரிஷிகள் சங்கீதம்" எனும் பெயரில் பல நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது. ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு பாடல் பயிற்சி அளிப்பதைப் போல மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் பயிற்சி அளிக்க அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் முயற்சிக்க வேண்டும். அதற்குரிய உதவிகளைச் செய்ய தயாராக இருக்கிறோம்,” என்றார். 



பின்னர் நடந்த "சின்னஞ்சிறு குயில்கள்" புத்தக வெளியீட்டில் அவினாசிலிங்கம் பெண்கள் கல்வி நிறுவனத்தின் பதிவாளர் டாக்டர் எஸ் கெளசல்யாபுத்தகத்தை வெளியிட எம். பாலசுப்ரமணியம் பெற்றுக் கொண்டார். பயிற்சி பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் எம். பாலசுப்பிரமணியம் சான்றிதழ்களை வழங்கினார். நூறு சதவிகித வருகைப்பதிவு செய்திருந்த மேதா,அக்ஷதா, அஸ்மிதா ஆகிய மூன்று குழந்தைகளுக்கு பாலவாணி விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்த பயிற்சி பயிலரங்கில் மாணவிகளும், பெற்றோர்களும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...