கூடலூரில் தேயிலை தோட்டத்தில் உலா வந்த மலைப்பாம்பால் தொழிலாளர்கள் பீதி : இலாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்

நீலகிரி : கூடலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் உலா வந்த மலைப்பாம்பை வனத்துறையினர் இலாவகமாகப் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

நீலகிரி : கூடலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் உலா வந்த மலைப்பாம்பை வனத்துறையினர் இலாவகமாகப் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

கூடலூர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்கள் இருக்கிறது. வனப்பகுதியில் காட்டுயானை, புலி, மான், காட்டெருமை, சிறுத்தைப்புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. மேலும், மலைப்பாம்பு, ராஜ நாகம், கட்டு விரியன் என பல வகை பாம்புகளும் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் மற்றும் பாம்புகள் அடிக்கடி தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால், தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், கூடலூர் தாலுகா கீழ்நாடுகாணியில் ஒரு தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு, வழக்கம்போல் தோட்ட தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தேயிலை செடிகளுக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. இதைக் கண்ட தொழிலாளர்கள் பயத்தில் அலறியடித்தவாறு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தேவாலா வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இலாவகமாக பிடித்தனர். தொடர்ந்து, கீழ்நாடுகாணியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அந்த பாம்பை பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...