கோவையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் இரண்டு நாட்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வேளாண் வானிலை ஆராய்ச்சித் துறைத் தலைவர் பன்னீர் செல்வம் தகவல் அளித்துள்ளார்.


கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் இரண்டு நாட்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வேளாண் வானிலை ஆராய்ச்சித் துறைத் தலைவர் பன்னீர் செல்வம் தகவல் அளித்துள்ளார்.

இது குறித்து பன்னீர் செல்வம் கூறுகையில், " கோவையை சுற்றியுள்ளப் பகுதிகளில் இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடனும் காணப்படுவதோடு மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இந்நாட்களில், வெப்பநிலையின் அளவு பகலில் 29 டிகிரி செல்சியஸாகவும், இரவில் 22 டிகிரி செல்சியஸாகவும் காணப்படலாம். காற்றின் வேகம் 5 கி.மீ/மணி முதல் 6 கி.மீ/மணி இருக்கும்.



மேலும், பொதுவாகக் கோவையில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 328 மி.மீ அளவு மழை பெய்யும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த வருடம் 368 மி.மீ அளவு மழை எதிர்பார்க்கப்பட்டது. அதில், அக்டோபர் மாதம் எதிர்பார்த்த 146 மி,மீ அளவை விட கூடுதலாக 151 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. ஆனால், நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்த 111 மி.மீ அளவைவிட குறைவாக 57 மி.மீ அளவுதான் மழை பதிவாகியுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் டிசம்பர் 5-க்கு பிறகு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்போது இருப்பது போலவே, நீலகிரியில் இன்னும் இரண்டு நாட்கள் மேகமூட்டமாகக் காணப்படும்," என்றார். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...