சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

கோவை : சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தொடங்கி வைத்தார்.

கோவை : சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தொடங்கி வைத்தார்.



உலகம் முழுவதும் எய்ட்ஸ் தின அனுசரிப்பு நாளாக டிசம்பர் 1-ம் தேதி ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ரத்த தானம்,ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திபடி 700-க்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியை காவல்துறை மேற்கு மண்டல தலைவர் பெரியய்யா துவக்கி வைத்தார்.



இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேண்ட் வாத்தியத்தோடு தொடங்கிய இந்தப் பேரணி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறைவு பெற்றது. 

அங்கு மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். இதனைத்தொடர்ந்து, எச்.ஐ.வி வைரஸ் ஆய்வக துவக்க விழாவும், மாணவர்கள் எச்.ஐ.வி எய்ட்ஸ் தொடர்பான வில்லுப்பாட்டு, ஊமை நாடகம் மற்றும் வீதி நாடகங்கள் நடைபெற்றது.



இந்தப் பேரணி குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி கூறுகையில், "தமிழகம் முழுவதும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்படுபவர்கள் ஸ்டேஜ் மூன்றில் தான் கண்டறியப்படுகின்றனர். இதனை முன்கூட்டியே அறிய உங்களை நீங்களே பரிசோதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது. 



மேலும், ஹெச்.ஐ.வி.யால் கோவையில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2016-ம் ஆண்டை விட தற்போது அதிக சதவீதம் குறைந்து இருக்கிறது. ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிப்படுவது குறைந்து, குற்றஉணர்ச்சியோடு ஒதுங்கி இருக்காமல், தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்," இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...