ஆந்திராவில் இருந்து கோவைக்கு ரயிலில் 30 கிலோ கஞ்சா கடத்தல் : ஒருவர் கைது

கோவை : கோவைக்கு ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த நபரை, 30 கிலோ கஞ்சா மூட்டையுடன் கோவை ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை : கோவைக்கு ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த நபரை, 30 கிலோ கஞ்சா மூட்டையுடன் கோவை ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை வழியாக வரும் ரயில்களில் போதைப்பொருட்களை கடத்துவதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவல்களின்படி, இன்ஸ்பெக்டர் வின்சென்ட் தலைமையில் காவல்துறையினர், கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு ஒரு மூட்டை உடன் வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், அந்த நபர் தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த மாதவன் (47) ,என்பது தெரிய வந்தது. மேலும், அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கல்லூரி மாணவர்களிடையே விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவர் வைத்திருந்த மூட்டையைக் காவல்துறையினர் சோதனை செய்தனர். அதிலிருந்து, 30 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடத்தி வந்த மாதவனும் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...