கோவை : விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்களாக நடைபெற்ற விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும் தமிழக அரசின் மின் தொடரமைப்பு கழகமும் விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தை, எதிர்த்து 70- க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்தோடு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை செஞ்சேரி மலையில் உள்ள சுல்தான்பேட்டை வெங்கிடராஜ் திருமண மண்டபத்தில் 3 -நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், விவசாயிகளுடன் மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் செய்த முயற்சி தோல்வியுற்றது. இந்நிலையில், இன்று மாலை கோவை காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் விவசாயிகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அந்தப் பேச்சு வார்த்தையில் , விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எடுக்கும் சர்வே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.