ஈரோட்டில் கைத்தறி துறையை மேம்படுத்த 'வீவ்ஸ்' ஜவுளிக்கண்காட்சி

ஈரோடு : இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் டெக்ஸ் வேலி இணைந்து நடத்தும் வீவ்ஸ் (WEAVES) டிசம்பர் 5 முதல் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஈரோடு : இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் டெக்ஸ் வேலி இணைந்து நடத்தும் வீவ்ஸ் (WEAVES) டிசம்பர் 5 முதல் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தென்னிந்தியாவின் இதயமாகச் செயல்படும் ஈரோட்டில் இருக்கும் மொத்த ஜவுளி விற்பனையின் சந்தையில் முதல் முறையாக வீவ்ஸ் என்ற கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சி நிகழ்வின் முதற்நோக்கமே தமிழ்நாட்டில் விசைத்தறி மற்றும் கைத்தறி துறையை மேம்படுத்துவதே ஆகும். 

தமிழ்நாடெங்கிலும் இருந்து 250-க்கும் அதிகமான நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தவுள்ளன. இதில், துணிகள், ஆடைகள், காதி, கைத்தறிகள், மெத்தை விரிப்புகள், ஜவுளி உற்பத்தி தொடர்பான இயந்திரங்கள், உதிரிப் பாகங்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. 

வியட்னாம், வங்கதேசம், தென் ஆப்ரிக்கா, மியான்மர் உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 6,000க்கும் மேற்பட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றனர். மேலும், கைத்தறி மற்றும் விசைத்தறியில், தமிழகத்தின் வளம் என்பதை எடுத்துக்காட்ட, இந்தக் கண்காட்சி மிகச் சிறந்த தளமாக இருக்கும். உள்ளூர் நெசவாளர்கள் தங்களது தயாரிப்பை, ஏற்றுமதி செய்ய சிறந்த வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், இந்நிகழ்வில் பல்வேறு விசைத்தறி கைத்தறித்துறையின் முக்கிய ஆளுமைகளால் ஜவுளித்தொழில்துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல் நடைபெறும். 4 நாட்கள் அரேங்கேறும் இக்கண்காட்சியில், ரூ.800 கோடி வரையிலான வர்த்தகம் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...