பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் ஓராண்டிற்கு நீட்டிப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சிலைக்கடத்தல் ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

சென்னை: சிலைக்கடத்தல் ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி, தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பார் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதேசமயம் இன்றுடன் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெறவிருந்தார். நேற்று ரயில்வே காவல்துறை சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றும் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பொன்.மாணிக்கவேல் மேலும் ஓராண்டிற்கு சிறப்பு அதிகாரியாக நீடிப்பார் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் பிரிவு, பொன்.மாணிக்கவேல் தலைமையின் கீழ் இயங்கும். நிலுவையில் உள்ள வழக்குகள், புதிய வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும். எந்த அதிகாரியிடமும் விசாரணை விவரங்களை அளிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...