லஞ்சம் : திருப்பூர் மாநகராட்சி ஊழியருக்குச் சிறை தண்டனை மற்றும் அபராதம்

திருப்பூர் : திருப்பூரில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியருக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் சிறை தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.


திருப்பூர் : திருப்பூரில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியருக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் சிறை தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் முன்னாள் வீட்டு பிளானிங் திட்ட உதவி பொறியளார் (2012) ராமலிங்கம். இவரிடம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ஐந்து வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் கேட்டதற்கு, ராமலிங்கம் ரூ.10 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். 

இதையடுத்து, ஒப்புதல் பெறுவதற்காக லோகநாதன் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று ராமலிங்கத்திற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாகக் கொடுத்துள்ளார். இதனை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ராமலிங்கத்தை கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பான வழக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்ட உதவி என்ஜினீயர் ராமலிங்கத்திற்கு 7-வது பிரிவு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 ஆண்டு தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், ஊழல் தடுப்பு சட்டம் 13/ 2 சட்டத்தின் கீழ் 5 வருடத் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்தார். 

பின்னர், ராமலிங்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...