கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து கஜா புயலில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே செல்வராஜ் தலைமையில் நிவாரண பொருட்கள் டன் கணக்கில் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவும் நோக்கில் கிராமங்களுக்கு சென்று வழங்கிட 20 பேர் கொண்ட குழுவினர் பயணித்துள்ளனர்.
மேலும், அரிசி, பருப்பு, பிஸ்கட், மெழுகுவர்த்தி , நாப்கின், போர்வைகள், சோப்பு, டீத்தூள் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்களும், பல நாட்களுக்கு அழுகாமல் இருக்கும் முட்டைகோஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு, நூல்கோல் போன்ற மலைக்காய்கறிகளும் டன் கணக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.