கோவையில் சிறுநீர் கழிக்கச் சென்ற இளைஞர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு

கோவை : கோவை அரசு மருத்துவமனையின் அருகே இருக்கும் பைபாஸ் சாலையில் உள்ள குளத்தோரத்தில் சிறுநீர் கழிக்க சென்ற இளைஞர் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை அரசு மருத்துவமனையின் அருகே இருக்கும் பைபாஸ் சாலையில் உள்ள குளத்தோரத்தில் சிறுநீர் கழிக்க சென்ற இளைஞர் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானலைச் சேர்ந்த நாகராஜ் (35). பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் பணி நிமித்தமாக வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் தையல்காரராக பணிபுரிந்து வருகிறார். அதேபோல, இவருடன் மணிகண்டன் என்பவரும் பணி செய்து வருகிறார். இந்த நிலையில், மணிகண்டனின் மனைவி கோவை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக நாகராஜ் இன்று மருத்துவமனைக்கு வந்துள்ளார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை சந்தித்து விட்டு அங்கிருந்து வந்த மணிகண்டன் மற்றும் நாகராஜ் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். பிறகு அரசு மருத்துவமனைக்கு எதிர்புறம் உள்ள பைபாஸ் சாலையில் இருக்கும் குளத்தோரத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளனர். அப்போது, நாகராஜ் திடீரென நிலைதடுமாறி குளத்தில் விழுந்தார். பின்னர், மணிகண்டன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். 



பின்னர், விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் போலீசார் குளத்தில் விழுந்த நாகராஜனை மீட்டனர். ஆனால், நாகராஜ் அதிக நீரை குடித்து விட்டதால் குளத்திலேயே இறந்துவிட்டார். அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுநீர் கழிக்கச் சென்றவர் குளத்தில் விழுந்து பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...