கஜா புயலால் வாழ்வை இழந்த வாழைமரங்கள் : கோவை சந்தையில் விற்பனையாகி விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வாழைத்தார்கள்

கோவை : கஜா புயலால் நிலைகுலைந்து போன வாழைமரங்களின், வாழைத்தார்கள் கோவையில் உள்ள உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப்படுகிறது.


கோவை : கஜா புயலால் நிலைகுலைந்து போன வாழைமரங்களின், வாழைத்தார்கள் கோவையில் உள்ள உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப்படுகிறது.



தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கடந்த வாரம் கஜா புயல் தாக்கியது. இதில், பெரும்பாலானோர் வீடுகளை இழந்து,  வாழ்வாதாரத்திற்கு தவித்து வருகின்றனர். அதேபோல, லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருந்த தென்னை, வாழை போன்ற மரங்களும் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதனால், விவசாயிகள் பேரிழப்பை சந்திதுள்ளனர். அவர்களுக்கான நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்து இருந்தாலும், அவை போதுமானதாக இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு சில விவசாயிகள் பொக்லைன் இயந்திர உதவியுடன் தென்னை மரங்களை மீண்டும் நிறுத்தி வருகின்றனர். ஆனால், வாழை விவாசாயிகளின் பாடோ திண்டாட்டமாகத்தான் உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இந்த வாழைத்தார்களை வாங்க முன்பணம் கொடுத்திருந்தனர். இந்நிலையில், கஜா புயல் தாக்குதலில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால், விவசாயிகள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.



இந்த நிலையில். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் உழவர் சந்தைக்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அங்கு, இந்த வாழைத்தாத்கள் ஏலத்தின் மூலம் விற்கப்படுகிறது. இதன் மூலம், கிடைக்கும் தொகை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...