கோவையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்: கத்தியால் குத்தியதில் ஒருவர் பலி

கோவை: மலுமிச்சம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அஷ்ரப் முகம்மது என்ற மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்தியதில் பலியான சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: மலுமிச்சம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அஷ்ரப் முகம்மது என்ற மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்தியதில் பலியான சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மலுமிச்சம்பட்டியில் இந்துஸ்தான் கல்வி குழுமங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் திருச்சியை சார்ந்த முதலாம் ஆண்டு சிவில் மாணவர் அஸ்ரப் முகமது-விற்கும், அதே கல்லூரியில் மதுரை பாளையவிளையன்குடியை சார்ந்த பி.இ ஜ.டி முதலாம் ஆண்டு மாணவர் தினகரனுக்கும் அவ்வப்போது சண்டை வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று தனியாக வந்த அஸ்ரப் முகமது-விற்கும், நண்பர்களுடன் வந்த தினகரன் இருவருக்கும் வழக்கம்போல சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தினகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஸ்ரப் முகமதுவை நெஞ்சிலும், கையிலும் குத்தி உள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவரை சக மாணவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.

அப்போது சிகிச்சை பலனின்றி அஸ்ரப் முகமது உயிரிழந்தார். இதனையடுத்து தினகரன் மற்றும் அவரது நண்பர்கள் சரவணக்குமார் மற்றும் நித்தீஸ்குமார் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த செட்டிபாளையம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...