கோவை: உலக தெலுங்கு கூட்டமைப்பின் வெள்ளி விழா ஆண்டு கோவையில் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

உலக தெலுங்க சர்வதேச கூட்டமைப்பு கடந்த 1992-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் வெள்ளி விழா கொண்டாட்டம் வரும் 18-ம் தேதி அவினாசி சாலையில் உள்ள எஸ்.என்.ஆர் கலை அரங்கில் நடைபெற உள்ளதாக கோவை அமைப்பின் தலைவர் ரமா விஜயகுமார் தெரிவித்தார்.
பந்தய சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், "நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த அமைப்பு கூடும். இந்த ஆண்டு இந்நிகழ்வு கோவையில் நடைபெறுகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ், பின்னணி பாடகர் வி.ஸ்ரீரினிவாஸ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். விஜயவாடாவைச் சேர்ந்த கலாசேத்திராவினரின் ருக்மணி கல்யாண நாட்டிய நிகழ்ச்சி இடம் பெறும். மேலும், தொழில் மற்றும் வணிக மேம்பாட்டிற்கும் சமுதாய பணியாற்றிய சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் கவுரவிக்கப்பட உள்ளார்.
இந்த அமைப்பின் சமூக சேவையின் ஒரு பகுதியாக வீல் சேர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்காக மேற்கொள்ள நிதி வழங்கப்படும்." என்றார்.