தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவால் தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானதால், தமிழகத்தில் நாளை (ஆக.,08) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானதால், தமிழகத்தில் நாளை (ஆக.,08) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

சுவாசக் கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த 11 நாட்களாகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானார். இதனால், தொண்டர்கள் சென்னை காவேரி மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் தி.மு.க., தொண்டர்கள் கனத்த இதயத்துடன் அதிர்ச்சியில் இருப்பதால், பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. எனவே, சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதனிடையே, கருணாநிதியின் மறைவிற்கு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 5 முறை முதலமைச்சரும், தற்போது எதிர்கட்சித் தலைவராகவும் இருந்த கருணாநிதியின் மறைவையொட்டி, தமிழக அரசின் சார்பில் நாளை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 நாட்கள் துக்கம் அனுசரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல, கருணாநிதியின் மறைவையொட்டி, புதுச்சேரியில் மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...