மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க ஸ்டாலின் முதலமைச்சரிடம் கோரிக்கை

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் இடம் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தார்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினர்.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் அபாயக் கட்டாயத்தை எட்டியுள்ளது.  அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் முழக்கங்களை எழுப்பியவாறு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி, துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிடோர் கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு உரிய கவுரவம் வழங்கவேண்டும். மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும், என செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் வலியுறுத்தினர்.

இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி கருணாநிதியின் குடும்பத்தினரிடம் உறுதியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், சட்டம் அனுமதிக்கிறதா என அதிகாரிகளுடன் ஆலோசிப்பதாக அவர் கூறியதாகவும் தெரிகிறது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...