கடும் மூச்சு திணறலால் அவதிப்படும் கருணாநிதி: முதலமைச்சருடன் மு.க.ஸ்டாலின், அழகிரி சந்திப்பு

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்தில் அவரை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க., மூத்த நிர்வாகிகள் நேரில் சந்தித்துள்ளனர்.

தி.மு.க., தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த மாதம் 28-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து 11-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று மாலை 6.30 மணிக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "கருணாநிதியின் வயது முதிர்வு காரணமாக அவர் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சமாளிப்பது சவாலாக உள்ளது. எனவே மருத்துவ சிகிச்சைகளை அவர் உடல் உறுப்புகள் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரியும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மருத்துவ அறிக்கை காரணமாக தி.மு.க.வினர் கடும் வேதனை அடைந்தனர். மக்கள் மத்தியிலும் நேற்று மாலை முதல் பரபரப்பான மனநிலை காணப்படுகிறது.

இன்று கடும் மூச்சு திணறலால் அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள சூழலில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்துள்ளனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு நேரில் சென்ற ஸ்டாலின், அழகிரி, எம்.பி., கனிமொழி, முரசொலி செல்வம் மற்றும் பெரியசாமி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க., மூத்த நிர்வாகிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்தனர்.

இந்த பரப்பான சூழலில், தி.மு.க.,வினர் முதலமைச்சரை சந்தித்திருப்பது தமிழகத்தில் மேலும் பரப்பான சூழலை உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள் சில நிமிடங்களில்...

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...