கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் திடீர் சாலை மறியல்

கோவை: காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதனிடையே வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்துத் தொழிற்சங்கத்தை சார்ந்த ஆட்டோ ஒட்டுநனர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை எதிர்த்து கோஷமிட்டனர்.

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில துணைத்தலைவர் மற்றும் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாரன் நம்மிடம் கூறுகையில், "நாடு முழுவதும் வாகனம் இயக்கும் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

விபத்து என்பது எதிர்பாராத விதமாக நடைபெறுவது. இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டால் விபத்து நடந்தால் நேரடியாக ஒட்டுநனர் சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அபராதமும் ஒட்டுனர்களே கட்ட நேரிடும். இது அவர்களின் குடும்பங்களை முற்றிலும் பாதிக்கும்.

மத்திய, மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் விலை உயர்வைக் குறைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 3 லட்சம் ஆட்டோக்கள் இயங்கவில்லை." என்றார்.



கோவை மண்டல இருசக்கர வாகன தொழிலாளர்கள் நலச்சங்கம் தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...