அன்னூர் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 மாணவர்கள் படுகாயம்

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கல்லூரி பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 20 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கல்லூரி பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 20 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பேருந்து ஒன்று அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்தது.



பேருந்தில் சுமார் 20 கல்லூரி மாணவ-மாணவிகள் பயணித்த நிலையில், பேருந்தை கருப்பையா என்ற ஓட்டுனர் இயக்கினார். பேருந்து ஆத்திகுட்டை என்ற கிராமத்தின் வழியே சென்ற போது, ஒட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் விபத்தில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து விபத்தினை பார்த்த பொதுமக்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர்.



தொடர்ந்து, அங்கு நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று, காயமடைந்த மாணவர்களை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர், அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் ஸ்டேரிங் செயல்படாமல் நின்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...