தொண்டர்கள் குவிந்ததால் காவேரி மருத்துவமனை முன்பு போக்குவரத்து மாற்றம்

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொண்டர்கள் மருத்துவமனையின் முன்பு குவிந்து வருவதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.


சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொண்டர்கள் மருத்துவமனையின் முன்பு குவிந்து வருவதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. 



திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. முக்கிய உடல் உறுப்புகளின் இயக்கத்தைப் பராமரிப்பது சவாலாக உள்ளது என்றும் கூறியுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு ஸ்டாலின், அன்பழகன் மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். 



மேலும், காவேரி மருத்துவமனையில் முன் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். ‘எழுந்து வா தலைவா’ என அவர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டநிலையில், ஏராளமானோர் அங்கு குவிந்து வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பாக போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இரவு முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...